இஸ்ரல் நாட்டில் அடுத்த மாதம் (டிசம்பர் 12) திட்டமிட்டபடி மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டி நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அந்த நாட்டின் சுற்றுலா துறை அமைச்சர் Yoel Razvozov.
முன்னதாக சனிக்கிழமை (நேற்று) அன்று ஒமிக்ராயன் வகை கொரோனா தொற்று (Variant) காரணமாக வெளிநாட்டவர்கள், இஸ்ரேல் வர தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
“‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் கலந்து கொள்ள வரும் போட்டியாளர்கள் அனைவரும் ஏலாத் நகரில் உள்ள ‘ரெட் ஸீ’ ரெசார்டில் தங்க வைக்கப்படுவர். 48 மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எப்படியும் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள், பட்டத்தை வெல்ல வேண்டும் என இலக்குடன் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்