Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை: சிரமத்தை சந்தித்த மக்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி பகுதியில் 2 வீடுகளில் சுவர் இடிந்தது. நல்வாய்ப்பாக அதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, அங்குள்ள நாகப்பன் நகர் மற்றும் வள்ளியம்மை நகரில் 150-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. அவற்றை சீரமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தூர்ந்துபோன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. வரம்பியம்,மணலி,எடையூர், ஆளத்தம்பாடி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளும் பொதுமக்களும் கலக்கமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஓடை வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற சிறுவன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். தொடர் மழை காரணமாக மேல்ஆதனூர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி சிறுவர்கள், வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். குகன் என்பவரின் மகன் அருணாஸ், திடீரென நிலைதடுமாறி ஓடையில் விழுந்தான். நீண்ட நேர தேடுதலுக்குப் பின் சிறுவன், சடலமாக மீட்கப்பட்டான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்