தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னையில் உள்ள கிண்டியில் செல்லப் பிராணிகளுக்கான எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதனை ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதுவர். அன்புக்குரியவர்களிடம் செலவிடும் நேரத்தை போலவே அதனிடமும் தனது பாசத்தை வெளிப்படுத்துவர். அப்படிப்பட்ட செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால் வீட்டில் ஒருவரை இழந்தது போலவே அந்த வீடே சோகத்தில் மூழ்கிவிடும். அதற்கும் சக மனிதர்களைபோல் உரிய மரியாதை கொடுத்து அடக்கம் செய்ய நினைப்பார்கள். எனினும் சிலர் வேறுவழியின்றி குப்பை மேடுகளிலோ, கடற்கரையிலோ, தெருக்களிலோ போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.
இது போன்ற செல்லப்பிராணிகள் இறந்து போனால் அவற்றை நல்ல முறையில் தகனம் செய்வதற்கு சென்னை கிண்டியில் ப்ளூ கிராஸ் சார்பில் எரிவாயு தகன மேடை முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
1964-ஆம் இந்தியாவில் தொடங்கப்பட்ட ப்ளு கிராஸ் அமைப்பு, விலங்குகள், பறவைகள் போன்றவற்றை கனிவுடன் பராமரித்து வருகிறது. தற்போது அந்த சேவையில் மேலும் ஒரு மைல் கல்லாக விலங்குகளுக்கான எரிவாயு தகன மேடை அமைத்திருப்பது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்