Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை: வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் - அம்பத்தூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை அம்பத்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரில் உடைமைகள் மிதக்கின்றன.

அம்பத்தூர் ஏரியில் இருந்து பட்டரவாக்கம் வழியாக கொரட்டூர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல், சென்னை மாநகராட்சி மண்டலம் 7-க்கு உட்பட்ட அம்பத்தூர், கருக்கு மேனாம்பேடு, ஞானமூர்த்தி நகர், டிடிபி. காலனி டி.என்.இ.பி. காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

image

மழைநீர் வீடுகளில் புகுந்ததால் வீடுகளில் உள்ள கட்டில் பீரோ உள்ளிட்ட உடைமைகள் நீரில் மிதக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதேபோல்தான் இப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நீரை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்