Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மக்கள் உணர்வுகளை மதித்து சித்திரை 1 ஆம் தேதியே தமிழ்ப்புத்தாண்டாக தொடர வேண்டும்: ஓபிஎஸ்

தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக தொடர, மாண்புமிகு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சித்திரை மாதப் பிறப்புதான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மரபினை சீர்குலைக்கும் விதமாக 2008 ஆம் ஆண்டு தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு என திமுக ஆட்சியில் மாற்றப்பட்டது.

image

அதனை தொடர்ந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப்பையில் “ இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது கண்டு மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

 எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சித்திரை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற நடைமுறை தொடர்ந்திட தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்

இதனைப்படிக்க...கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க கோரிய மனு தள்ளுபடி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்