இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
ஒமைக்ரான் தொற்று பரவியிருந்த தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி இருந்தது. நேற்றைய தினம் வெளிநாடுகளில் இருந்துவந்தவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் யாரேனும் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற சோதனை நடைபெற்றது.
அதில், தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த 66 மற்றும் 46 வயதான 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் விமானத்தில் உடன் பயணித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்டா கொரோனா வகையைவிட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஒமைக்ரான் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியிருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்