இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 961 ஆக அதிகரிப்பு; டெல்லி, மகாராஷ்டிராவில் தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக 961 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 320 பேர் ஒமைக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 641 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகப்பட்சமாக தலைநகர் டெல்லியில் 263 பேரும், மகாராஷ்டிராவில் 252 பேரும், குஜராத்தில் 97 பேரும், ராஜஸ்தானில் 69 பேரும், கேரளாவில் 65 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் தெலுங்கானா-62, தமிழ்நாடு-45, கர்நாடகா-34, ஆந்திரா-16, அரியானா-12, மே.வங்கம்-11, மத்திய பிரதேசம்-9, ஒடிசா-9, உத்தரகாண்ட்-4, சண்டிகர்-3, ஜம்மு-காஷ்மீர்-3, உத்தரப்பிரதேசம்-2, கோவா, இமாச்சலப் பிரதேசம், லடாக், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தவிர மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்