Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோவோவேக்ஸ், கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க பரிந்துரை

சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவோவேக்ஸ் தடுப்பூசி மற்றும் பயோலாஜிகல் இ நிறுவனத்தின் கார்பிவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் கொரோனா சிகிச்சையில் பயன்படும் மால்நுபிராவிர் மாத்திரையை உற்பத்தி செய்து விற்பனை செய்ய அனுமதி கொடுக்கலாம் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
 
image
நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி சீரம் இன்ஸ்டிடியூட் சார்பில் இரண்டாது முறையாக அளித்த விண்ணப்பத்தை நிபுணர் குழு தீவிரமாக பரிசீலித்து அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இந்த தடுப்பூசியை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும் டிசிஜிஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுபாட்டு தலைவர் கடந்த மே மாதம் அனுமதி அளித்திருந்தது. இதேபோல் பயோலாஜிகல் இ நிறுவனம் பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற பரிசோதனைகளின் முடிவுகளை சமர்பித்து அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரியிருந்தது. இதற்கும் அனுமதி அளிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
 
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு 93 சதவிகிதமாக இருக்கும் உயர் அபாய பிரிவினருக்கு மால்நுபிராவிர் மாத்திரைகளை பயனபடுத்த அனுமதி அளிக்கலாம் என்றும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்