மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியை 12%ஆக உயர்த்தியதற்கு டெல்லி கூட்டத்தில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், 5%ல் இருந்து 12%ஆக உயர்த்தும் முடிவை கைவிட கோரிக்கை விடுத்துள்ளார். ஜிஎஸ்டி வரி உயர்வு, சிறு குறு தொழில்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், நூல் மூலப்பொருட்களின் விலையை குறைக்கவும் நடவடிக்கை தேவை எனவும், அதேபோல், எஃகு, தாமிரம், அலுமினியம் ஆகியவற்றின் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்