உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வகை கொரோனாவால், டெல்டா வகை வைரஸை விட குறைவான பாதிப்பு தான் ஏற்படுவதாக தென்னாப்ரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் தொடர்பாக பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ஏஞ்சலிக், தற்போதைய சூழலில் பாதிப்பு குறைவாக இருப்பினும் இதன் வீரியம் குறித்து வரும் காலங்களில் தான் தெரிய வரும் என கூறியுள்ளார். ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும், சுவை இழப்பு, வாசனையின்மை, காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை என விளக்கமளித்துள்ளார்.
அதே சமயம் ஒமைக்ரான் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் ஏஞ்சலிக் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் ஏஞ்சலிக் கோட்ஸி கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்