Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்; ஒமைக்ரானை தடுக்க தடுப்பூசி பணிகள் தீவிரம்

தமிழகமெங்கும் இன்று மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் திரிபு பரவல் தொடங்கியிருக்கும் காரணத்தால், தற்போதைக்கு தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பாக 13 மெகா தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1800 முகாம்கள் நடைபெற உள்ளது.

image

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால், முதல் தவணை செலுத்திவிட்டு - இரண்டாவது தவணை செலுத்தாமல் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சென்னையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 10,39,704 நபர்கள் இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 11,83,905 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தொடர்புடைய செய்தி: மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்