Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

ஒமைக்ரான் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதனைதொடர்ந்து, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

image

அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களை இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதையும் படிக்க: 'மது அருந்திவிட்டு பீகாருக்கு வராதீர்கள்' - முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்