Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெண் சிசுக் கொலைகளை தடுக்க சிறப்புக் குழு: மதுரை ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலைகளை தடுக்க, 10 துறைகளை உள்ளடக்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, கௌசல்யா தம்பதிக்கு மூன்றாவதாக கடந்த 21 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த குழந்தையை பெற்றோர் கொன்று புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யாவை தேடி வருகின்றனர். பெண் சிசுவின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

image

இதற்கிடையே மதுரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பெண் சிசுக் கொலைகளை தடுக்க சிறப்புக் குழு உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, பெண் சிசுக் கொலைகளை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். சமூகநலத்துறை, வருவாய், காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு என 10 துறைகளை உள்ளடக்கிய சிறப்புக்குழுவினர், பெண்சிசுக் கொலையை தடுக்கும் பணியில் ஈடுபடுவர் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இக்குழு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சிசுக்கொலைகள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றும், குழந்தைகளை பராமரிக்க முடியாத பெற்றோர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தைகளை வழங்கினால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்