ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் சிலர் மீது விருதுநகர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின் போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
தொடர்புடைய செய்தி: "ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளது" - தமிழக அரசு பதில் மனு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்