பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மண்டல பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையால், ரொக்கத் தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், எக்காரணம் கொண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் இல்லை என்ற நிலை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசுத் தொகுப்பை வழங்கவேண்டிய நாளுக்கு முன்பாகவே நியாயவிலைக் கடைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கும் முன்பாக இருப்பை சரிபார்த்துக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும். பரிசுத் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்கப்படுவதை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: பொங்கலுக்கு நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்