இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேவைப்பட்டால் இரவு நேர பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவும் விகிதம் 10 சதவிகிதத்துக்கும் மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டெல்டாவைவிட ஒமைக்ரான் வகை 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மருந்து, ஆக்சிஜன் போன்றவற்றை இருப்பை உறுதி செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்