காற்று மாசு குறையாததால், டெல்லியில் இன்று முதல் பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். முன்னதாக காற்று மாசு தொடர்பான வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், காற்றும் மாசு அதிகரித்திருக்கும் போது பள்ளிகளை எதற்காக திறந்தீர்கள் என டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
பெரியவர்களை வீட்டில் இருந்தே பணிபுரியக் கூறிவிட்டு குழந்தைகளை மட்டும் ஏன் பள்ளிக்கு வரக் கட்டாயப்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், காற்று மாசுபாட்டை குறைப்பது குறித்து பக்கம் பக்கமாக பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யும் மத்திய மாநில அரசுகள் நடைமுறையில் எதையும் செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்