ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசின் குழு தமிழகம் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களான மருத்துவர்கள் வினிதா, புர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்னை வந்தடைந்தனர்.
தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வர் எனவும் ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைகள் வழங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது. ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வென்டிலேட்டர் வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்