தை பொங்கலை முன்னிட்டு தென்காசி, வள்ளியம்மாள்புரத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதிக்கக் கோரும் மனுவை தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வரும் 11ஆம் தேதிக்கு முன்பாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வரும் 15ஆம் தேதி சேவல் சண்டையை நடத்த அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தென்காசியை சேர்ந்த சங்கர் ராம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும், சேவல் சண்டை எங்கு நடைபெறவிருக்கிறது என்பதை குறிப்பிட்டு கோரிக்கை மனு வழங்கப்படாததாலும், அனுமதி கோரும் மனுவிற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தமிழக அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
சேவல் சண்டை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்படும் என மனுதாரர்கள் உறுதியளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, போட்டியை அனுமதிப்பது குறித்த தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜனவரி 11ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிக்க: காணொலிக் காட்சி வாயிலாகவே வழக்கு விசாரணைகள் தொடரும் - உயர்நீதிமன்றம் அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்