Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 46 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க, அம்மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரளாவில் கொரோனா முதல் இரண்டு அலைகளில் இல்லாத அளவாக, தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 357 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 ஆயிரத்து 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு நேரடி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி அரசு ஊழியர்கள், வீட்டில் இருந்து பணிசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தால் 12.70 லட்சம் பேர் பலி: லான்செட் மருத்துவ இதழில் தகவல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்