கடந்த 9 மாதங்களில் பராமரிப்பு காரணங்களுக்காக 35 ஆயிரம் ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், நடப்பு நிதியாண்டில் எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே நிர்வாகம், ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பராமரிப்பு காரணங்களுக்காக 35 ஆயிரத்து 26 ரயில்களை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் 41ஆயிரத்து 483 ரயில்கள் திட்டமிடப்பட்ட நேரத்தை தாண்டி தாமதமாக இயக்கப்பட்டதாகவும் பதிலளித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள 120க்கும் அதிகமான திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
இதையும் படிக்க: “அபைட் வித் மீ” குடியரசுதின நிறைவு விழாவில் காந்தியின் விருப்ப பாடலை நீக்கியது மத்திய அரசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்