பஞ்சாபில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 36 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்வதற்கான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை கண்டித்து தர்ணாவில் ஈடுபடப் போவதாக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. தற்போது பஞ்சாபிலும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் சரண்ஜித் சிங் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. குறிப்பாக ஒப்பந்த பணியாளர்கள் 36 ஆயிரம் பேரை நிரந்தரமாக்க பஞ்சாப் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், இதுவரை அவர் ஒப்புதல் வழங்காததால், சட்ட வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்காவிட்டால் அவருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி எச்சரித்துள்ளார். மேலும், பாரதிய ஜனதாவின் அழுத்தம் காரணமாகவே இந்த மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்