முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனு, வரும் 6ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளார். முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் உச்ச நீதிமன்றம் குளிர் கால விடுமுறையில் இருந்ததன் காரணமாக வழககு பட்டியலிடப்படாமல் இருந்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் முறையீடு வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டுவர ராஜேந்திர பாலாஜி தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வரும் 6ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன் ஜமீன் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: " ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றினார்கள்" எம்எல்ஏ வானதி சீனிவாசன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்