ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் உகாண்டா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில், 'B' பிரிவில் இந்திய அணியும் உகாண்டா அணியும் களம் கண்டன. டாஸ் வென்ற உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணியில், ரகுவன்சி 144 ரன்களும், ராஜ் பவா 162 ரன்களும் குவித்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய உகாண்டா வீரர்கள், இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அந்த அணியில் அதிகபட்சமாக பஸ்கல் முருன்கி 34 ரன்கள் எடுத்தார். உகாண்டா அணி 20 ஆவது ஓவரில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 162 ரன்கள் எடுத்த இந்திய வீரர் ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதையும் படிக்க: ”கேப்டனாக இருந்த விராட் கோலி வீரராக மாற சிறிது காலம் ஆகும்” - தினேஷ் கார்த்திக்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்