Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பெகாசஸ் பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்

இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, சீனாவுடனான எல்லைப்பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஐந்து மாநிலத் தேர்தலின் தாக்கம், நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்க்கப்பட்ட பிரச்னையை எழுப்புவதில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உள்ளன. முன்னதாக இஸ்ரேலுடன் கடந்த 2017-ம் ஆண்டு செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

image

இதையடுத்து நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல் அளித்ததாக அரசுக்கும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிற்கும் எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதினார். இதுகுறித்தே இன்றும் கூட்டத்தொடரின்போது பேசப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த மத்திய அரசு முன்வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்தி: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒலிக்கும் திருக்குறள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்