தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3,172 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், கொரோனா சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 15,938 என்றாகியுள்ளது என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 80,755 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 949 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து, இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,980 என்று உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,172 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33,91,011 என்றாகியுள்ளது. இதுவரை கொரோனா உறுதியானோரின் எண்ணிக்கை 34,44,929 என்றாகியுள்ளது.
இன்று பாதிப்பு உறுதியானோரில், அதிகபட்சமாக சென்னையில் சுமார் 223 பேர் உள்ளனர். அடுத்தபடியாக கோவையில் 136 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நேரத்தில் கடந்த கொரோனா அலையையும் நாம் சற்று ஆராய்வோம். அந்த வகையில் கோவிட் முதல் அலையில் முதன்முதலாக மே 31, 2020 -க்குப் பிறகுதான் தினசரி தொற்று உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கு, 1000க்கும் அதிகமாக பதிவானது. பின் ஜுலை 27, 2020 ல் 6,993 பேருக்கு என ஒரே நாளில் அதிகபட்ச நபர்களுக்கு கோவிட் உறுதியானது. பின்னர் ஆகஸ்ட் 15, 2020 ல் 127 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். முதல் அலையில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகப்படியான உயிரிழப்பு இதுவே. டிசம்பர் 29,2020 முதல் 1000 க்கும் கீழ் படிப்படியாக தொற்று குறையத் தொடங்கியது.
இதுவே இரண்டாம் அலையில் மார்ச் 19, 2021-க்குப் பிறகு தினசரி பாதிப்பு 1000 க்கும் அதிகமான நபர்களுக்கு கோவிட் தொற்று உறுதியானது. மே 21, 2021 ல் 36184 பேருக்கு என ஒரே நாளில் அதிகபட்ச நபர்களுக்கு கோவிட் உறுதியானது. மே 30 , 2021 ல் 493 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். முதல் அலையில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகப்படியான உயிரிழப்பு இதுவே. நவம்பர் 1, 2021 முதல் 1000 க்கும் கீழ் படிப்படியாக தொற்று குறையத் தொடங்கியது.
மூன்றாம் அலையில் டிசம்பர் 31, 2021 க்குப் பிறகு தினசரி பாதிப்பு 1000 க்கும் அதிகமான நபர்களுக்கு கோவிட் தொற்று உறுதியானது. ஜனவரி 22, 2022 ல் 30,744 பேருக்கு என ஒரே நாளில் அதிகபட்ச நபர்களுக்கு கோவிட் உறுதியானது. ஜனவரி 27 , 2022 ல் 53 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். முதல் அலையில் ஒரே நாளில் நிகழ்ந்த அதிகப்படியான உயிரிழப்பு இதுவே.
இதில் தற்போது பிப்ரவரி 20 , 2022 முதல் 1000 க்கும் கீழ் படிப்படியாக தொற்று குறையத் தொடங்கி உள்ளது.
- சுகன்யா
சமீபத்திய செய்தி: மியாமி கடற்கரையில் மக்கள் குளித்துக்கொண்டிருந்த பகுதியில் திடீரென விழுந்த ஹெலிகாப்டர்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்