Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 268 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சென்னையில் 15 இடங்களில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிய வரும். வாக்கு எண்ணிக்கைக்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படிக்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பரப்புரை செய்யாதது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்