Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"உக்ரைனின் கதி இன்று முடிவாகிவிடும்”- ரகசிய இடத்திலிருந்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி

தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம் தெரிவித்துள்ளார். ரகசிய இடத்திலிருந்து உக்ரைன் அதிபர் இதுதொடர்பாக வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி இக்கருத்தை கூறியுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி மூலம் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் இப்பேச்சு நீடித்ததாக தெரிகிறது. அப்போது ரஷ்யா மீதான தடைகளை வலுப்படுத்துதல், போதிய ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசியதாக ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர், “உக்ரைனின் கதி என்ன என்பது இன்று முடிவாகிவிடும். இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா அளிக்கும் உதவிக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று `ரஷ்யா எங்களை தாக்கி வரும் நிலையில் தனித்து விடப்பட்டதாக உணர்கிறோம்’ ஜெலன்ஸ்கி நேற்று கூறியிருந்தார். இந்த சூழலில் பைடன் அவருடன் பேசியுள்ளது, விவாதத்துக்கு உட்பட்டுள்ளது. இதற்கிடையில் உக்ரைனுக்கு கூடுதலாக பாதுகாப்பு உதவிகள் தரப்படும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எவ்வகையில் உதவி செய்யலாம் என ஆலோசித்து வருவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

சமீபத்திய செய்தி: உக்ரைன் போருக்கு எதிரான ஐநா தீர்மானம்: அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திய ரஷ்யா-என்ன காரணம்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்