Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

''அமைதிக்காக எந்த வழியிலாவது உதவ இந்தியா தயார்'' - உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி

ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கி சரமாரியாக குண்டுமழை பொழிந்து வருகின்றன. ரஷ்ய ராணுவத்தை மேற்கொண்டு முன்னேற விடாமல் உக்ரைன் ராணுவம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசியுள்ளார்.

அந்த தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும், உக்ரைனின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளார். உக்ரைன் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

image

அதேநேரத்தில், உக்ரைன் - ரஷ்யா இடையே நடக்கும் போரை உடனடியாக கைவிட்டு, இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைதியை ஏற்படுத்த எந்த வழியிலாவது பங்காற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, தற்போதைய போர் நிலவரம் குறித்து விரிவாக விளக்கினார். இதைத் தொடர்ந்து போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் உடைமைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். 

இரு நாடுகளும் உடனடியாக வன்முறையை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், அமைதியை நிலைநாட்ட இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார். உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் குறிப்பாக இந்திய மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். மேலும், இந்தியர்களை பத்திரமாகவும், விரைவாகவும் அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்ட உக்ரைன் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்