திருவாரூர் நகரில் மழையை பொருட்படுத்தாது மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூரில் காலை முதல் மழை பெய்து வருவதால் ஓட்டு போட வந்த பொதுமக்கள் குடைபிடித்தபடி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் 23 ஆயிரத்து 838 ஆண் வாக்காளர்கள், 26 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 27 ஆண் வாக்குச்சாவடிகள், 27 பெண் வாக்குச்சாவடிகள், 3 பொது வாக்குச்சாவடிகள் என 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: தருமபுரி: வாக்காளர்களுக்கு கொலுசு வழங்கியதாக திமுக-அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்