Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மணிப்பூரில் தொடங்கியது முதற்கட்ட தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மணிப்பூரில் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 38 இடங்களுக்கு நடக்கும் இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி உள்பட பிரதான கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், பிஷ்னுபூர், கங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில், முதல்வர் பைரன் சிங், சபாநாயகர் கேம்சந்த் சிங், துணை முதல்வர் யம்நம் ஜாய்குமார் சிங் மற்றும் மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் லோகேஷ் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

image

173 வேட்பாளர்களின் விதியை நிர்ணயிக்கும் இந்த தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். ஆளுநர் இல.கணேசன் தலைநகர் இம்பாலில் வாக்களித்தார். இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடந்து முடிந்ததும், மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்