Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை தொடங்கினார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கியது. இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இது, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு அதிகரிக்கப்படுமா?, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் எழுந்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்