Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக நாடுகளை பாதித்த உக்ரைன்- ரஷ்யா விவகாரம்: ஏன் தெரியுமா?

உக்ரைன் -ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரு பீப்பாய் இந்திய மதிப்பில் 7 ஆயிரத்து 423 ரூபாயாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள ரஷ்யா, இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

image

உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் விலையானது தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்