பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் இருப்பதாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 12,838 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிப் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. காலை முதல் வரிசையில் நின்று மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இருப்பினும், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வாக்குப்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி வாக்குச்சாவடியில் அதிகாரிகளுடன் அதிமுக, தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் இருப்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் அழைத்துவரக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்