ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை போர் தொடுக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பதற்கான நம்பிக்கையை இழக்கவில்லை என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் ரஷ்யா குவித்துள்ளதால் எந்த நேரமும் போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி உள்ளது. ஆனால், ரஷ்யா அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் ராணுவ செயல்பாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் தொலைபேசி மூலம் 40 நிமிடங்கள் பேசியுள்ளனர். உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எனினும் உரிய தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் பைடனும், ஜான்சனும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போதை உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி தப்புமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்