தெலங்கானாவில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டுள்ளதாக விலங்குகள் உரிமை ஆர்வலர் அதுலாபுரம் கவுதம் புகார் தெரிவித்துள்ளார். திகுல் என்ற கிராமத்தில் நாய்கள் அதிகளவில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார் அவர். கிராம பஞ்சாயத்து நிர்வாகம், நாய் பிடிப்பவர்களை வேலைக்கு அமர்த்தி மார்ச் 27 அன்று தெரு நாய்களுக்கு விஷம் ஊசி செலுத்தி கொன்று குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுடைய நாய் இறந்தைப் பற்றி சிலர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியான வீடியோவில், கிராமத்தில் உள்ள கிணற்றில் நாய்களின் சடலங்கள் குவியலாக கிடப்பதைக் காட்டுகிறது.
100 community and pet dogs were killed by the village sarpanch in Village Thigul, Jagadevpur Mandal,Telangana. pic.twitter.com/D41tgt9bu8
— People For Animals India (@pfaindia) March 28, 2022
இச்சம்பவம் குறித்த சித்திபேட்டை மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ள அதுலாபுரம் கவுதம், உரிய விசாரணை நடத்தி குற்றம்புரிந்தவர்கள் மீது வழங்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக் கரைசல் - டாக்டர் கைது!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்