Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதா?

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பெலாரஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்து.

பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்ததாகவும் அப்போது பொதுவான உடன்படிக்கை எட்டக்கூடிய சில அம்சங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய குழுவின் தலைவர் விளாடிமினி மெடின்ஸ்கி தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Russian Deputy Defence Minister Colonel General Alexander Fomin (L) and Russian ambassador to Belarus Boris Gryzlov

உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வரும் ரஷ்ய படைகளில் ஒரு பெரும் பிரிவு தலைநகர் கீவ்விலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் முன்னேறிக்கொண்டிருப்பதாக செயற்கைக்கோள் காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனினும் உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து கடுமையாக சண்டையிட்டு வருவதால ரஷ்யா எதிர்பார்த்த அளவு முன்னேற முடியாமல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

கார்கிவ் நகரில் பல குடியிருப்பு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததற்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதே நேரம் நிலம், நீர், ஆகாயம் என மூன்று மார்க்கமாகவும் தாக்கவல்ல அணு ஆயுதங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்