தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கும் திட்டத்தை கிடப்பில் போட ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடெங்கும் தனியார் நிறுவனங்களும் ரயில் சேவை வழங்க அனுமதிக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் தனியார் நிறுவனங்களிடம் அரசு கோரியது. இரு நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்த நிலையில் அந்த ஒப்பந்தப்புள்ளியை அரசு ரத்து செய்தது. பல வெளிநாடுகளில் தனியாருக்கு ரயில் இயக்க அனுமதி தந்தும், ஆனால் அது வெற்றிகரமாக செயல்படாததால் மீண்டும் அந்தந்த அரசுகளே ரயில் சேவையை ஏற்றுக்கொண்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனியார் ரயில் திட்டத்தை சில காலத்திற்கு நிறுத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அரசு அளவுக்கு முதலீடு செய்ய உள்ள தனியார் நிறுவனம் வரும் வரை இத்திட்டம் நிறுத்திவைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்