Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேகதாது விவகாரம்: கர்நாடக அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

மேகதாது திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய அரசை அணுகுவதென கர்நாடகாவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, அதற்காக திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. திட்டப்பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது.

ஆனால், மேகதாது திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில், அம்மாநில அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள், கர்நாடக சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Karnataka: CM Bommai Holds All-Party Meeting On Water Row. Will Meet Union Minister, If Needed

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, மேகதாது திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சரை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அடுத்த வாரம் நேரில் சந்திக்க இருப்பதாகக் கூறினார். மாநிலங்களவைக் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன், தானும் டெல்லி செல்ல உள்ளதாகவும், இதன் பின்னும் தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி செல்ல உள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக தமிழக அரசின் சம்மதம் இருந்தால் மட்டுமே மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே தெரிவித்திருந்தார்



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்