முதற்கட்ட விசாரணையில் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட்டை கொலை செய்ய ரூ.15 கோடி கொடுக்கத் தயாராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீனிவாஸ் கவுட். இவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாக சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
கைதான 8 பேரில் 3 நபர்களுக்கு, பாஜக மூத்த தலைவரும், மகபூப் நகர் முன்னாள் எம்.பி.யுமான ஏ.பி.ஜிதேந்தர் ரெட்டியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் டெல்லியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களிடமிருந்து உத்தரப் பிரதேசத்தில் இருந்து வாங்கப்பட்ட கைத்துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக
போலீசார் தெரிவித்துள்ளனர். அமைச்சரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவாதாகவும் அரசியல் பிரமுகருக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட்டை கொலை செய்ய ரூ.15 கோடி கொடுக்கத் தயாராக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது, இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் ஜிதேந்தர் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த பொய் வழக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாகக் கூறினார்.
முன்னதாக புதன்கிழமை மாலை டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து உதவியாளர்கள் சிலர் கடத்திச் செல்லப்பட்டதாக ஜிதேந்தர் ரெட்டி கூறியிருந்தார், மேலும் இது தொடர்பாக அவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்