Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'காஷ்மீர் பைல்ஸ் படத்தை யூடியூப்பில் வெளியிட சொல்லுங்கள்' - பாஜகவிடம் சீறிய கேஜ்ரிவால்

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி, டெல்லி சட்டசபையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் குறுக்கிட்ட நிலையில், 'அந்த படத்தை யூடியூப்பில் போடுங்கள், அனைவரும் பார்க்க இலவசமாக கிடைக்கும்' என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிலளித்துள்ளார்   

இது தொடர்பாக பேசிய கேஜ்ரிவால், " 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என பா.ஜ.,வினர் விரும்பினால், திரைப்பட தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரியிடம் பேசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில், யூடியூப்பில் வெளியிட வேண்டும். ஏன் இதற்கு வரிவிலக்கு வேண்டும்? உங்களுக்கு இது வேண்டுமானால்  யூடியூப்பில் போட சொல்லுங்கள். எல்லாரும் ஒரே நாளில் பார்த்துவிடுவார்கள்” என்றார்.

image

மேலும், "நாடு முழுவதும் பாஜக கட்சியினர் இப்படத்திற்காக தெருத்தெருவாக சினிமா போஸ்டர் ஒட்டுகிறார்கள். நீங்கள் அரசியலுக்கு வந்தது இதை செய்யவா? வீட்டிற்கு போனால் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்வீர்கள்? ஒரு நாட்டை எட்டு வருடங்கள் உங்கள் பிரதமர் மோடி ஆண்ட பிறகும் விவேக் அக்னிஹோத்ரியிடம் நீங்கள் தஞ்சம் அடைவது என்பது, பிரதமர் தனது பதவிக்காலத்தில் எதையும் செய்யவில்லை என்பதையேக் காட்டுகிறது " என்று கூறினார்.

உ.பி., பீகார், உத்தரகண்ட், சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்திரைப்படத்திற்கு ஏற்கனவே வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்