Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் 2022: இந்த முறையும் “ரைஸ்” ஆகாத சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் 2022 தொடரில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை போராடி வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் தொடர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 12-வது சூப்பர் லீக் ஆட்டத்தில், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சைன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணி களமிறங்கியது. சன் ரைசர்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யாத நிலையில், லக்னோ அணியில் துஷ்மந்திரா சமீராவுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார்.

Image

லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுலும், குயின்டன் டி காக்கும் களமிறங்கினர். ஆனால், தொடக்கம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 1 ரன் எடுத்திருந்தநிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் டிகாக். இதையடுத்து களமிறங்கிய எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து தடுமாறியது. இதன்பின்னர், துவக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுலுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணி அதிரடியாக விளையாடி, ரன்ரேட்டை உயர்த்தியது. போட்டியின் இறுதியில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த அணி 169 ரன்களை குவித்தது. கே.எல். ராகுல் 61 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் எடுத்திருந்தனர்.

Image

170 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது சன்ரைசர்ஸ் அணி. இந்த சீசனில் சேஸிங் செய்யும் அணிகளுக்கு இந்த ஸ்கோர் எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் சன்ரைசர்ஸ் இந்த வாய்ப்பை துவக்கத்திலேயே கைவிடத் துவங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் இருவரும் 20 ரன்களை கூட எட்டாமல் அவுட்டாக, தடுமாறத் துவங்கியது சன் ரைசர்ஸ். அடுத்து ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்தார் ஐடன் மார்க்ரம். இருவரும் பொறுமையாக விளையாடி இலக்கை நோக்கி முன்னேற துவங்கினர். ஆனால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முன்னதாகவே இருவரையும் ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் க்ருனால் பாண்ட்யா.

Image

தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து அதிரடி காட்டத் துவங்கினார். 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில் பூரான் அவுட்டாக, சன் “ரைஸ்” ஆகும் வாய்ப்பு மங்கத் துவங்கிவிட்டது. அடுத்தடுத்து வந்தவர்கள் ஒற்றை ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு பேஷன் ஷோ நடத்த 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது சன் ரைசர்ஸ். மிடில் ஓவர்களின் முடிவில் இலக்கை நோக்கி விறுவிறுவென முன்னேறிய போதும் , டெத் ஓவர்களில் அடிக்க ஆளில்லாமல் அதன் வேகம் அடங்கிப் போனது. இதனால் வெறும் 12 ரன்கள் வித்தியாசயத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவியது அந்த அணி. இது அவர்களுக்கு 2வது தோல்வி. கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு இது 2வது வெற்றி. 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் வெற்றியை முடக்கிப்போட்ட ஆவேஸ் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்