நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி.யின் ஐபிஓ குறித்து தெளிவு இன்னமும் கிடைக்கவில்லை. 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 30000 கோடி ரூபாய் அளவுக்கு திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. உக்ரைன் போர் மற்றும் இதர பொருளாதார சூழல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஆர்வம் இல்லாததால் முன்பு கணிக்கப்பட்டதைவிட குறைவான அளவு பங்குகளையே எல்.ஐ.சி வெளியிடுகிறது. தவிர சந்தை மதிப்பும் குறைந்திருப்பதாக தெரிகிறது.
ஐபிஒ வெளியிடுவதற்கு செபியின் அனுமதி ஏற்கெனவே கிடைத்திருக்கிறது. மே 12-ம் தேதி வரை ஐபிஓ கொண்டுவருவதற்கு கூடுதல் அனுமதி தேவையில்லை. ஒரு வேளை அதற்குள் ஐபிஓ வெளியிடவில்லை என்றால் மீண்டும் அனுமதி வாங்க வேண்டி இருக்கும். முன்னதாக 7 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 50000 கோடி அளவுக்கு திரட்ட திட்டமிடப்பட்டது.
ஆனால், முதலீட்டாளர்களிடையே போதுமான ஆதரவு இல்லாததால் 5 சதவீத பங்குகளை மட்டும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் பங்குவிலக்கல் மூலம் ரூ.65000 கோடி அளவுக்கு திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்