Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம்தான்” - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்றும், பொது இடத்தில் மாஸ்க் அணியாதோருக்கு அபராதம் வசூலிப்பதற்கு மட்டும்தான் அரசு விலக்கு அளித்திருப்பதாகவும் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்களுக்கு ஓய்வறை திறக்கும் நிகழ்வு நடந்தது. அதில் தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், செயலாளர் கோபால், மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா தொற்று பல நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும்கூட டெல்லி, ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.  கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசும் கடிதம் எழுதி இருக்கிறது.

image

தமிழகத்தில் முககவசம் கட்டாயம் தான். இப்போதைக்கு பொது இடத்தில் அபராதம் விதிப்பதற்கு மட்டும் தான் விலக்கு அளித்துள்ளோம். எனவே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது ஆகியவையெல்லாம் மிக மிக அவசியம். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. இது இனியும் தொடர, கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். எனவே தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதைக்கு நாள்தோறும் 70 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு  வருகிறது. மக்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்தி: ரஜினிகாந்த், விஜய் படத் தயாரிப்பாளர் டி.ராமராவ் காலமானார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்