இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், அங்கு தமிழர்களின் நிலையை அறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் செய்யும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிய உள்ளார். விலைவாசி விண்ணை முட்டியுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்களின் உடனடித் தேவைகளை அவர் அறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ரூ.28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்களை வழங்கவும்; ரூ.15 கோடியில் 500 டன் பால்பவுடர்களை இலங்கை மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதுபோல மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் இலங்கைக்கு இந்தியா 760 டன் எடையுள்ள பல்வேறு மருந்துகளை வழங்கி உதவியுள்ளது.
இதையும் படிக்க:பாஜக சரியான சித்தாந்தத்துடன் சரியான திசையில் நகரும் கட்சி: ஜே.பி நட்டா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்