இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட மாதங்களாக இந்திய பயணத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒத்திவைத்திருந்த நிலையில், இறுதியாக நேற்று குஜராத் வந்தடைந்தார். முதல் நாளில் காந்தி ஆசிரமம், அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், அதானி உள்ளிட்ட பெருந்தொழிலதிபர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். குறிப்பாக பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பரம் உறவை மேம்படுத்துவது குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான படையெடுப்பால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: இந்தியா வந்தார் பிரிட்டன் பிரதமர் - குஜராத் காந்தி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்றார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்