வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, `இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் மேலும் மூன்று நாட்கள் பரவலாக மழை தொடரும். சென்னையில் அதிகபட்சமாக 36 டிடிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.
இதனிடையே, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: அரசுப் பள்ளியில் மாணவர்களை விரட்டி விரட்டி துடைப்பத்தால் அடித்த சக மாணவர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்