தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் முதல் விசா நேர்காணல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்ட் ஹெப்லின், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், விசா நடைமுறைகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கப்படுகிறது என்றார். கொரோனாவுக்கு முன்பு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவசரத் தேவைக்காக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாகவும், பொய் கூறி அவசரத் தேவை வசதியை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்