தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
இந்த தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வுக்காக தமிழகம் புதுச்சேரியில் 3,936 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 51ஆயிரத்து 710 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 308 இடங்களில் கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவ - மாணவியர் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமில்லை என்றாலும், உடல் நிலை பாதிப்புள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். மேலும், மாணவர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு மைய வளாகங்களுக்குள் செல்போன்களை எடுத்துவரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: ஓராண்டினை நிறைவு செய்யும் திமுக அரசு – சொன்னபடி சாதித்ததா? சறுக்கியதா? - ஓர் அலசல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்