தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சித்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹப்ஷிப்பூர் என்ற இடத்தில் அதிகபட்சமாக 108 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அங்கும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், ஒடிஷா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக சுட்டெரித்த வெயில் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். ஒடிஷா மாநிலத்தில் பள்ளி செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
இதையும் படிங்க... ஆட்டோவில் இருந்து இழுத்துச் சென்று இளம்பெண் பாலியல் வன்கொடுமை - உ.பி.யில் கொடூரம்
இந்நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் மாலை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டிலும்கூட ஓசூர், செஞ்சி, திருவாண்ணாமலை, கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்